ஸ்ரீவில்லிபுத்துார் : ஊராட்சி செயலாளர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியத்தில்  இன்று (பிப்ரவரி 4) தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஊராட்சி ஒன்றிய தலைவரும், ஊராட்சி செயலாளருமான சிவசங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவுறுத்தல் படி வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் வைத்து சட்டையில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநில தலைவர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சின்னமாரிமுத்து தலைமை தாங்க, மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் கனேஷ்பாண்டி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி