ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்திராயிருப்பு ஊராட்சியில் 100 நாள் வேலையினை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தார் அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலையினை பொதுமக்களுக்கு முறையாக கொடுக்கவில்லை எனவும் இன்னும் வருடம் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் தங்களுக்கு வருடத்திற்கு100 நாட்கள் வேலை வழங்க வேண்டிய வேலை தற்போது வரை 20 நாட்கள் மட்டுமே வழங்கி இருப்பதாகவும், மேலும் முழுமையாக 100 நாளும் வேலை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை வேலை வாய்ப்பு வழங்க கூறி கோரிக்கை விடுத்து வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாததால் தகவல் கொடுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்களை வந்து சந்தித்து கோரிக்கைகளை கேட்கவில்லை எனக் கூறி அதிகாரிகள் நேரடியாக வந்து தங்களுக்கு உடனடியாக 100 நாள் வேலையினை வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை முற்றுகை போராட்டத்தை கைவிட்டு செல்ல போவதில்லை எனக்கூறி தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.