ஸ்ரீவி: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை. 2 பேர் கைது...

81பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு பேர் கைது. ரொக்கம் பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வன்னியம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பல பகுதியில் தமிழக அரசலால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரராஜ் தலைமையில் போலீஸார் வன்னியம்பட்டி பஜார் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் முத்து பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து நம்பர் வாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 2000/-த்தை கைப்பற்றி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி