விருதுநகர்: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

66பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூமாபட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூன் 7 இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈகை பெருநாள் என்று சொல்லக்கூடிய பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வத்திராயிருப்பு அடுத்துள்ள கூமாபட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு அனைவரும் நலமுடன் வாழ வேண்டி துவா செய்து பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி