விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பகுதிகளில் நாளை ஜூன் 10-ந் தேதி மின்தடை என மின்சார வாரியம் அறிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஆதலால் அன்றைய தினம் மம்சாபுரம், காந்திநகர், ஒத்தப்பட்டி செண்பகத்தோப்பு ரோடு, படிக்காசு வைத்தான்பட்டி, வைத்தியலிங்கபுரம், வீட்டுவசதி வாரியம், ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட மின் பொறியாளர் முனியசாமி தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.