ஸ்ரீவி: லாட்டரி விற்பனை செய்த நபர் கைது...

81பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லாட்டரி சீட்டு விற்பனை ஈடுபட்ட நபர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மங்காபுரம் வாட்டர் டேங்க் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக ஸ்ரீவில்லிபுத்துார் நகர் காவல் நிலையத்து தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் திருமதி ஜோதி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அய்யம்பட்டியை சேர்ந்த பிச்சை மணி என்பவர் விற்பனை செய்வது தெரிய வந்தன. மேற்படி அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி