ஸ்ரீவில்லிபுத்தூர்: சட்ட விழிப்புணர்வு முகாம்.. மாவட்ட நீதிபதி பங்கேற்பு

57பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர்: சட்ட விழிப்புணர்வு முகாம்.. மாவட்ட நீதிபதி பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் குடியிருப்பு பகுதியில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாப்பு, நடைமுறைப்படுத்தும் திட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமை தாங்கி, விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வீரண்ணன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயசுதாகர், கூடுதல் சார்பு நீதிபதி ரத்தனவேல் பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வக்கீல் சங்க செயலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிபதிகளாகிய நாங்கள் மலைவாழ் மக்களை தேடி வந்துள்ளோம். தற்போது கல்வி மிகவும் அவசியம், உங்கள் குழந்தைகளை கண்டிப்பாக படிக்க வையுங்கள். கல்வி தான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். உங்களுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள், சட்டம் சாராத பிரச்சினை எதுவாயினும் இலவசமாக ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி