ஸ்ரீவி: 40 வகை ஈரநில பறவைகள் கணக்கெடுப்பில் தகவல்..

59பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில்
40 வகை ஈரநில பறவைகள்
கணக்கெடுப்பில் தகவல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 40 வகை ஈரநில பறவைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கண்மாய், குளங்கள், நீரோடை ஆகியவற்றில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதனடிப்ப டையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு உட்பட்டதேர்வு செய்யப்பட்ட கண்மாய், குளங்களில் ஏராளமான பறவைகள், வண்ணமயமான பறவைகளை கணக்கெடுத்து பார்வையிட்டு பதிவு செய்தனர். இதுகுறித்து வன ஆர்வலரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான நடராஜன் கூறுகையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான நீர்ப்பறவைகள் உள்ளன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்ச் பகுதியில் 40 வகையான நீர்ப்பறவைகள் உள்ளன. கடந்த காலங்களை விட தற்போது நீர்ப்பறவைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி