ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கோர்ட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.ஜி.பி உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நெல்லை கீழநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கு ஒன்றுக்காக நெல்லை கோர்ட்டுக்கு கடந்த 20-ம் தேதி வந்தார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், கோர்ட்டு முன்பு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை சம்பவத்தை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. பின்னர் அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்து, உடனடியாக செயல்படுத்தவும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டி.ஜி.பி சங்கர்ஜிவால், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் பேரில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல சோதனைக்கு பின்பே கோர்ட்டுக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.வ