திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 4 ஆவது வார்டு எம். ஜி. ஆர் காலணியில் ரூ. 15 இலட்சம் மதிப்பில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், 17 ஆவது வார்டில் ரூ. 10 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், சிவகாசி மாநகராட்சியில், வார்டு எண் 37-ல் ரூ. 40 இலட்சம் மதிப்பில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், பின்னர், திருவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 13 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதையும், 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ. 123 கோடி மதிப்பில் (Bio-methanation Plant) காய்கறி கழிவு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, அங்கு சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.