ஸ்ரீவி: நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்த டி. ஐ. ஜி பொன்னி...

72பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியளித்த டி. ஐ. ஜி பொன்னி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கூமாபட்டி அங்குள்ள காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராம்குமார், இவர் ஒரு வழக்கு தொடர்பாக கூமாபட்டி ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 51 என்பவரிடம் ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ராமராஜ் 7000 தர முடியும் என்று கூறி கடந்த 28. 02. 2022 ஆண்டு கூமாபட்டி காவல் நிலையம் சென்று 7000 பணத்தை கொடுக்க சென்றபோது அருகே இருந்த போலீஸ் ஏட்டு ரேணுகாந்த் என்பவரிடம் கொடுக்கச் சொல்லுகிறார் ரேணுகாந் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் இடம் கொடுக்க சென்றபோது இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போது மதுரை டி. ஐ. ஜியாக இருந்த பொன்னி இந்த வழக்கு தொடர அனுமதி அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய தொழில் பாதுகாப்புபடை
டி. ஐ. ஜியாக பணியில் இருக்கும் பொன்னி, இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஏப். 15 ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி