ஸ்ரீவி: முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

65பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுக அமைச்சர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைனில் குற்றப்பத்திரிகை இன்று ஏப்ரல் 16 தாக்கல் செய்தனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரவீந்திரன் என்பவர் தனது சகோதரியின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்போதைய வெம்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் K.T. ராஜேந்திரபாலாஜி ரூபாய் 3 கோடி வரையில் பெற்றுக் கொண்டு அரசு வேலைகள் வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றியுள்ளார் என்று விஜய நல்லதம்பியின் வாக்குமூலத்தை அடுத்து முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் பலர் மீது அமைச்சர் மீது இரு வெவ்வேறு வழக்குகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை இன்று ஏப்ரல் 16 ஆன்லைன் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி