கூலி தொழிலாளி கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை. ஸ்ரீவிலிபுத்தூர்
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம். சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 23. அதே தெருவில் குடியிருந்து வரும் சிவக்குமார் வயது 30. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கும் முன் விரதம் இருந்து வந்தது கடந்த 2. 11. 2020அன்றுசிவகுமார் வீடு அருகே உள்ள காலி இடத்தில் மாரிமுத்து அவரது நண்பர்கள் சேர்ந்து பேசும்போது சிவகுமார், மாரிமுத்துவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அறிவாளால் சிவகுமாரை சரமாரியாக வெட்டினார் படுகாயம் அடைந்த சிவக்குமார் இறந்து போனார். இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு ப திவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தொழிலாளியை கொலை செய்த மாரிமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5000 அபதாரம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபதார தொகை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று தீர்புபு வழங்கி உள்ளார்.