ஸ்ரீவி: பராமரிப்பு பணி ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்..

58பார்த்தது
விருதுநகர் மாவட்டம், பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட வாடிப்பட்டி-கொடைரோடு இடையே உள்ள பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயில் (வ. எண். 16848) வருகிற ஜூன் 6-ஆம் தேதி முதல் ஜுன் 11-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்கிறது. இதற்காக இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும். மேலும் மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை-
செங்கோட்டை ரெயில் (வ. எண். 16847) வருகிற ஜுன் 8-ஆம் தேதி மற்றும் 11-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரெயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனதெற்கு ரெயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி