ஸ்ரீவி: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது...

55பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பள்ளி முன்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மங்காபுரம் பள்ளி முன்பாக உள்ள பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நகர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அய்யனார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் பெட்டி கடையில் வைத்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த பெருமாள்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரிய வந்தன. மேலும் பெட்டி கடையில் இருந்து நம்பர் லாட்டரி மற்றும் பிற மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் ஈஸ்வரன் மீது தகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி