ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டத்திற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாள் பிறந்த ஆடி மாதம் பூர நட்சத்திரத்தின்று ஆண்டு தோறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேப்போல இந்தாண்டு ஆடிப்பூர திருவிழா ஜூலை மாதம் 20-தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வாளகத்தில் ஜுன் 6 நேற்று இரவு நடைபெற்றது முன்னதாக ஆண்டாள் கோயில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்ற, பின்னர் முகூர்த்த பட்டு கட்டப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் உள்ள தேர் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஜூலை 24-ந் தேதியன்று கருட சேவை நிகழ்ச்சியும், ஜூலை 28-தேதி காலை 9 மணிக்கு தேரோட்ட விழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் ஆண்டாள் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், அறங்காவலர்கள், கோவில்அலுவலர்கள் செய்து வருகின்றனர்.