விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி சாமிதரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் கோவில் சன்னதியில் உள்ள ஆண்டாள் மற்றும் வடபத்திரம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பூரண மரியாதை மற்றும் மாலை, பிரசாதம், கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.