ஸ்ரீவி: மா, தென்னை தோப்புகளை சேதபடுத்தும் குரங்குகள் கூட்டம்..

80பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை
அடிவார பகுதியில் முகாமிட்டு உள்ள குரங்குகள் கூட்டம். மாம்பழம்,
தென்னை மரங்களை சேதப்படுத்து வருதால் விவசாயிகள்
கவலையில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவக்கல், கூமாபட்டி, அத்திகோவில் போன்ற ஆற்று படுகையில் மா, தென்னை சாகுபடி பல ஏக்கரில் நடக்கிறது. தற்போது மாம்பழம் சீசன் உச்சத்தை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள தாணிபாரை இணையும் ஓடை பகுதியில் கடந்த சில மாதங்களாக 15 மேற்பட்ட குரங்குகள் குட்டியுடன் முகாமிட்டு மாங்காய், இளநீர் உள்ளிட்ட விளைப் பொருட்களை பறித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் தம்பிபட்டி கான்சபுரம் ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோப்புகளில்விளைப் பொருட்களை சேதம் ஏற்படுத்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோ வந்த குரங்குகள் கூட்டம் ஓடை பகுதியை தங்களது வசிப்பிடமாக மாற்றி குரங்குகள், இப்பகுதியில் உள்ள கோயிலில் வழங்கும் இலவச உணவு கிடைப்பதால் இருப்பிடமாக மாற்றி, மாம் பழங்கள், இளநீர்,
தேங்காய்களை பறித்தும் சேதம் ஏற்படுத்துவதுடன், இரவு நேரம் இங்குள்ள மரங்களில் இடையே பதுங்குவதால் எங்களுக்கு பெரும் அச்சமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி