சிவகாசி: சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

59பார்த்தது
சிவகாசியில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன். துவக்கம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகருநெல்லிநாத சுவாமி திருக்கோவிலில், சித்திரை பெருவிழா வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நிகழ்ச்சி அதிவிமர்ச்சியாக நடைப்பெற்று, திருவிழா தொடங்கியது.
முன்னதாக சுவாமிக்கு, அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள்நடைப்பெற்றன. தொடர்ந்து இரவு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைப்பெறுகிறது. மேலும் தொடர்ந்து பத்து நாட்கள் நடைப்பெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு உபயதாரர்கள் உபயம் அளிக்க, ஒவ்வொரு நாளும் அலங்கார வாகனத்தில் சுவாமி, அம்பாளும் வாணவேடிக்கையுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைப்பெறும். மேலும் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வரும் 22-4-2024 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4. 00 மணியளவில் திருத்தேரோட்டம் வைபவம் நடைபெறுகிறது. கொடியேற்று நிகழ்ச்சியை காண திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிவன் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி