விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மலைப் பகுதியில் அமைந்து உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி உள்ளிட்ட 4நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.
மேலும் அனுமதிக்கப்படும் நாட்களில் காலை 6மணி முதல் நன்பகல் 12 மணி வரை மட்டுமே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மிகவும் புண்ணியமிக்க நாளாக கருதப்படும் மகாளய அமாவாசை நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.
நாளை (அக்.,2) காந்தி ஜெயந்தி விடுமுறை நாளாக இருப்பதால் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வழக்கமாக காலை 6 மணி முதல் நன்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் நடைமுறையை சற்று தளர்த்தி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்
இதனை மாவட்ட நிர்வாகம், வனத்துறை இணைந்து இந்த கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை வேண்டுமென பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.