விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மேலப்புதூர் நடுத்தெருவில் வசிப்பவர் மாரிமுத்து மகன் சிவா (21), இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 19. 3. 2022 அன்று 15 வயது உள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்று பாலியல் தொல்லை தந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சிவாவை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரவைு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் குற்றம் சாட்டப்பட்ட சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 33 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.