விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

159பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை. சாத்தூர் பகுதியில் கடந்த ஆண்டு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பவரை சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செல்வத்தை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி