ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள குளத்தில் இருந்து அரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை மீட்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள திருமண நாயக்கர் மஹால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. திருமலை நாயக்கர் மகாலை சுற்றிலும் சுமார் ஒரு கிலோ ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவை அனைத்தும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் இன்று அதிகாலை அரை அடி உயரம் உள்ள நடராஜ் சிலை மீட்கப்பட்டது.
இக்குளத்தில் மீன் பாசி குத்தகை எடுத்திருக்கும் தங்கமாங்கனி என்பவர் அதிகாலையில் அப்பகுதியில் தனது ஊழியர்களுடன் மீன்பிடிக்க வலைகளை அமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வழக்கில் இடையே சிக்கிய நடராஜர் சிலையை கண்டெடுத்துள்ளார். உடனடியாக காவல்துறை மற்றும் வருவாய் துறை இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்டெடுக்கப்பட்ட சிலையை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.