வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

73பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில்வே நிலையத்தை முற்றுகையிட்ட மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 1ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் தற்போது தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில்வே நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பை மீறி ரயில்வே நிலையத்திற்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ரயில்வே தண்டவாளத்தில் அமர வந்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுக்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் வெளியே அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அவர்களே கலைந்து செல்லும்படி காவல் துறையினர் கூறியதையடுத்து அனைத்து வழக்கறிஞர்களும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி