பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

69பார்த்தது
மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த 36 ஆண்டு காலமாக கல்வித்திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நிறுவனரும் மாநில தலைவருமான கருப்பையா அவர்கள் தலைமையில் உயர் நீதிமன்ற பார்கவுன்சில் டெல்லி, சென்னை, மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் தாளமுத்தரசு அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு
தங்கப்பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ்களையும வழங்கினார்

மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் 550 மதிப்பெண்கள் மற்றும் பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண்கள் பெற்ற
53 மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you