மாநில முழுவதும்
போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது குறித்தும் பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே
போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலையை கடந்து செல்பவர்களை நிறுத்தி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை காவல்துறையினர் வழங்கினர். மேலும் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பழங்களை வழங்கியும் ஊக்குவித்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.