விருதுநகர்: தனியாக வீட்டில் இருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

51பார்த்தது
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரமேஸ்வரன் வயது 36. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், இதனால் மன வருத்தத்தில் தூக்கம் வராமல் புலம்பிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய தாய் ராமலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி