கண்மாயை தூர்வாரி கருவேல மரங்களை அகற்ற‌ கோரிக்கை

69பார்த்தது
கண்மாயை தூர்வாரி கருவேல மரங்களை அகற்ற‌ கோரிக்கை
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பெரிய கண்மாய் அமைந்துள்ளது. தற்போது இந்த கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் சூழ்ந்து நீர் வரத்து இன்றி காணப்படுகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்
கோவிலாங்குளத்தில் உள்ள பெரிய கண்மாய் நிறைந்தால் மூன்று ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும். இந்த கண்மாய் நீரை நம்பி முன்பு சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்தக் கண்மாய் சின்ன கட்டங்குடி, பெரிய கட்டங்குடி, கோபாலபுரம், பாளையம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த கண்மாய் நிறைந்தால் சுற்றியுள்ள கிணறுகள் நிறைந்தே காணப்படும். தற்போது இந்த கண்மாய் மழைநீர் வரத்து இன்றி காணப்படுகிறது. இந்த கன்மாயை சுற்றி ஏராளமான கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. நீர்வழிப் பாதைகளும் அடைபட்டு காணப்படுகிறது. இதனால் கன மழை பெய்தாலும் கண்மாய்க்கு நீர் வரத்து குறைவாகவே உள்ளது. எனவே சுற்றுவட்டார பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாயை தூர்வாரி, கருவேல மரங்களை அகற்றி, நீர்வழிப் பாதை அடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி