காமராஜர் நினைவிடத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் காமராஜர் இல்லத்திலிருந்து என்னுடைய சட்டமன்ற குழு தலைவர் பணியை தொடங்குகிறேன் எனவும் சட்டமன்ற குழு தலைவராக என்னை நியமித்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்
மேலும் பேசிய ராஜேஷ் குமார் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள் தொகுதி அளவில் உள்ள பிரச்சனை களை மட்டுமே பேசி வந்த எனக்கு தமிழக முழுவதும் உள்ள பிரச்சினையை பற்றி பேசுவேன் என்றார்.
மேலும் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக நவோதயா பள்ளி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தற்போது ஆட்சி முடியும் நேரத்தில் வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும் தவிர செயல்பாட்டுக்கு வருவதில் லை என்றார். மேலும் மத்திய அரசு பல திட்டங்களை கூறிவிட்டு நல்ல திட்டங்களை நிறைவேற்றாமல் மத்திய அரசு இருப்பதாகவும் கூறினார்
மேலும் பேசிய ராஜேஷ்குமார் ஏற்கனவே பலமுறை பிரதமர் தமிழகமும் வந்து சென்றுள்ளார் அவர் சென்ற பிறகு எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை என்றார்
அதே போன்று நிச்சயமாக அவர்கள் நினைத்தது மாதிரி எந்த வித மாற்றமும் தமிழகத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை எனவும் அதே போல் அகில இந்திய அளவிலும் நிச்சயமாக வரக் கூடிய நாடாளு மன்ற தேர்தலில் அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்
கள் என்பது தான் உண்மை என்றார்