தமிழகத்தில் திமுக ஆட்சியில் மதுபான கடையில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதை கண்டித்து இன்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்கள், தொண்டர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதிலும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் அசன் ஹோட்டல் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மேலும் மதுபான ஊழலை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.