ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாள் விழாவான 30ம் தேதி இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர். 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பகதோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9: 05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி. ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.