ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாசபெருமாள்கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவின் 2வது வார சனிக்கிழமை. ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று சொல்லப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள்கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்ககூடிய மலைக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற மாநிலத்திலருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மலையேறி சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் புரட்டாசி 2 வது வார சனிக்கிழமையான இன்று அதிகாலை
ஸ்ரீனிவாசபெருமளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் புரிந்து தானிய பொருள்களை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகையால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து, மருத்துவம் குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.