*டிராவல்ஸ் - ஐ கேன்சல் செய்ததால் பயண சீட்டுத் தொகை உட்பட 30, 250 ரூபாய் பாதிக்கப்பட்ட பயணிக்கு டிராவல்ஸ் நிர்வாகம் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு*
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனா, ரவிக்குமார், நிவேதா ஆகியோர் வெங்கடேஸ்வரா டிராவல்ஸ்-ல் சென்னையில் இருந்து சிவகாசிக்கு பயணம் செய்ய ட்ராவல்ஸ்-ற்கு ஆன்லைன் மூலம் 2250 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
17. 01. 2023 அன்று பயணம் செய்ய காத்திருந்த நிலையில் டிராவல்ஸ் கேன்சல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று ஏற்பாடு செய்யாமல் புக் செய்த பணத்தை திருப்பி தரவில்லை என 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி வெங்கடேஸ்வரா டிராவல்ஸ் நிர்வாகம் 2250 ரூபாயை திரும்பச் செலுத்தவும், மன உளைச்சலுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழக்குச் செலவு 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.