தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை
காங்கிரஸ் துவங்கிவிட்டது என
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி பேட்டி.
அண்ணாமலை பேச்சு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் வடிவேலு பேச்சு போன்று உள்ளது என விமர்சனம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று
காங்கிரஸ் முதலில் குரல் கொடுத்தது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதிக்கீடு சரியாக வழங்க முடியும். மோடி தமிழகத்தில் கோயில்களை அரசாங்கம் கொள்ளையடிக்கிறது என தவறான தகவல்களை கூறுகிறார். கோயில்கள் கொள்ளையர்களின் கையில்இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கோயில்கள் அரசின் கையில் வந்தது. மோடி
இந்தியா குறித்து அறிந்தவர் கிடையாது.
தமிழகத்தில் அறநிலைய துறை சிறப்பாக செயல்படுகிறது. மோடி
இந்தியா கூட்டணியை பலவீன படுத்த நினைக்கிறார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை
காங்கிரஸ் துவங்கிவிட்டது.
திமுக, பாஜாவிற்கு தான் போட்டி என
அண்ணாமலை கூறியதற்கு, நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என விமர்சனம். பேட்டி போது பாரளுமன்ற, சட்ட உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.