வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

65பார்த்தது
வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
சிவகாசி சிவன் கோயிலில்
வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசியில் பழமைவாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் பட்டர் சுப்பிரமணியம் கொடி மரத்தில் கொடியேற்றினார். சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு விஸ்வநாதசுவாமி, விசாலாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முன்னதாக கொடி மரத்திற்கு பாலாஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தனம் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். வரும் 12ஆம் தேதி புதன்கிழமை திருக்கல்யாணமும், 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரேவதி மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி