தாலுகா அலுவகத்தில் பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம்

371பார்த்தது
தாலுகா அலுவகத்தில் பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட டி. கே. எஸ். , தங்கையா ரோடு, ராணி அண்ணாகாலனி, போஸ் காலனி, நாரணாபுரம் எம். ஜி. ஆர். , நகர், கண்ணகி காலனி, கே. கே. நகர் விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு மனுகொடுத்து பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. , கட்சி சார்பில் சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், தேவா பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர்கள் அன்னத்தாய், கவுரி, மாரிச்சாமி வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாண்டீஸ்வரன், மோகன்ராஜ் மார்க்சிஸ்ட் கட்சி நகர்குழு உறுப்பினர்கள் ஜெபஜோதி மாடசாமி பங்கேற்றனர். பின்னர் தாசில்தார் லோகநாதன், நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய பின்பு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி