ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பந்தபாறையில் யானைகள் கூட்டம். மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பின்புறம் பந்தபாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் தேவையின்றி மலையடிவாரம் செல்வதை தவிர்க்கவும், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வனத்துறையினர் உஷார்படுத்தி உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ராக்காச்சி அம்மன், செண்பகதோப்பு பேச்சி அம்மன் கோவில், பந்தபாறை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் கடந்த இரண்டு மாதத் திற்கு மேலாக காணப்படு கிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட
வனத்துறையினர் இரவு, பகலாக ரோந்து சென்றும், வெடி, வெடித்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை தொடர்ந்து மாலை நேரங்களில் மலையடிவார தோப்புகளுக்கு வரும் யானைகள் மா, தென்னை, வாழைகளை சேதப்படுத்தி வருவது நீடிக்கிறது. கடந்த இரு நாட்களாக பந்த பாறை பகுதியில் 3 யானைகள் கொண்ட குழு தோப்புகளை சேதப்படுத்தி வருகிறது. இதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே,
திருவண்ணாமலை பின்புறம் பந்தபாறை மலையடிவார பகுதிகளுக்கு மக்கள் தேவையின்றி செல்வதை தவிர்க்கவும். விவசாய தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வனத்துறை உஷார்படுத்தி எச்சரிக்கை விடுத்து உள்ளது.