சிவகாசி: கல்குவாரியில் மூழ்கி வாலிபர் பலி..

51பார்த்தது
சிவகாசி அருகே
நீச்சல் தெரியாததால்
கல்குவாரியில் மூழ்கி வாலிபர் பலி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலப்பட்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கதக்க ஆண் பிரேதம் மிதப்புதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஶ்ரீனிவாசன் தலைமையில் தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று குவாரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் கல்குவாரியில் மூழ்கி இறந்தது சிவகாசி அருகே பள்ளப்பட்டி சேர்ந்த பிரதீப் குமார் (வயது 25) என்பது தெரிய வந்தது நேற்று ஏப். 15 மாலை குளிக்க சென்றவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி