சிவகாசி: ஆபத்தான பயணம் மேற்ககொள்ளும் தொழிலாளி

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆயிரத்து மேற்பட்ட பட்டாசு, பிரிண்டிங், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளுக்கு பிரிண்டிங் செய்வதற்காக வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் லாரிகளில் அட்டைகள், பேப்பர்கள் மற்றும் மூலப்பொருட்கள் வந்து இறங்குகின்றன. அவ்வாறு கொண்டு செல்லும்போது, லாரி, வேன்களில் மூட்டைகளுக்கு மேல் அமர்ந்து ஆண், பெண் தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். 

ஆலைகளுக்கு கட்டுமான பணிகளுக்கு பெண் தொழிலாளர்கள் லோடு ஆட்டோவில் அழைத்து செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. லாரியில் அட்டைகள், பேப்பர்கள் அதிகமாக ஏற்றப்படும்போது, அதற்கு மேல் தொழிலாளர்கள் அமர்வதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் லாரிகள், லோடு ஆட்டோகள் மீது அமர்ந்து எந்தவித பிடிப்பும் இல்லாமல் பெண்களும் பயணிப்பதால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. 

இதற்கிடையே தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதில் பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களில் அமர்ந்து செல்வதால் அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, விதிகளை மீறி இவ்வாறு ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி