சிவகாசி: அந்த்யோதயா ரயில் வருமா? மக்கள் எதிர்பார்ப்பு...

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
அறிவிப்பு வெளியிட்டு 6 ஆண்டுகள் தாண்டியாச்சு
தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா ரயில் இயக்கப்படுவது எப்போது
பயணிகள் எதிர்பார்ப்பு.
செங்கோட்டை-தாம்பரம் அந்த்யோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சிவகாசி ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ரயில்வே சார்பில், தாம்பரம் நாகர்கோவில் இடையே அந்த்யோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த2018-ல் தொடங்கப்பட்டது. பேருந்து கட்டணத்தைவிட குறைவாக இருப்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தாம்பரம் டூ செங்கோட்டை அந்த்யோதயா ரயில் விடும் திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த ரயில் சேவை இன்னும் தொடங்கவில்லை.
தாம்பரம்-செங்கோட்டை வழித்தடத்தில் அந்த்யோதயா ரயில் சேவையை தொடங்கும் அறிவிப்பு வெளியிட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த அறிவிப்பு வெளியிட்ட பிறகு, சோதனை முயற்சியாக ரயில் இயக்கப்பட்டது. ஆனால், இதுவரை ரயில் சேவை தொடங்கவில்லை. இது, பயணிகள் மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் அந்த்யோதா ரயில் சேவை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி