சிவகாசி: குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்....

62பார்த்தது
சிவகாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக பெரியகுளம் கண்மாயிலிருந்து கிணறு மூலமாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் குழாய் மூலமாக கொண்டு செல்லப்படும் நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள்தோறும் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி வருவதால் தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மக்கள் நலன் கருதி உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி