சிவகாசி: இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு.....

1052பார்த்தது
சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளியின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் கே. கே. நகரை சேர்ந்தவர் விஜயபாண்டி என்கிற படையப்பா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று விஜயபாண்டியின் மனைவி பவுன்ஈஸ்வரி (23) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது திருவள்ளுவர் காலனியை சேர்ந்த அந்தோணி என்கிற மாரீஸ்வரன், ஹரி, விக்கி, சாமுவேல், பொன்பாண்டி ஆகியோர் பவுன்ஈஸ்வரியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை இழுத்து சென்று தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட பவுன்ஈஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி