சிவகாசி பகுதியில் வெவ்வேறு இடத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இரு பெண்கள் உள்பட நான்கு பேர் காயம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ரிசர்வ் லைன் பாரதிநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வி , இவர் டூவீலரில் தனது தாயார் ஆதிலட்சுமியை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். மேலும்
திருத்தங்கல்லை சேர்ந்த சேகர், சிவகாசி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத லோடு வேன் மோதியதில் காயம் அடைந்தார், அதைப்போல் சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி இவர் தனது நண்பருடன் சைக்கிளில் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் காயம் அடைந்தார். மேலும் விபத்து நடைப்பெற்றது குறித்து சிவகாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.