சிவகாசி: லோடுமேன் வழக்கில் இருவர் கைது...

1049பார்த்தது
சிவகாசி அண்ணா காலனியில் முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த மெக்கானிக் முத்துப்பாண்டியை கொலை செய்த நேரு காலணியைச் சேர்ந்த மணிகண்டன், தனபாலை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் முத்து பாண்டி, இவர் மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு 8: 30 மணி அளவில் திருத்தங்கல் ரோடு அண்ணா காலனியில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். முன் விரோதமா அல்லது மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் முத்துப்பாண்டியை கொலை செய்ததாக நேரு காலனியைச் சேர்ந்த மணிகண்டன் 35, தனபால் 39, ஆகியோரை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், முத்துப்பாண்டி அடிக்கடி மணிகண்டனிடம் மது கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மது வாங்கி தரவில்லையென்றால் கொலை செய்து விடுவேன் என அடிக்கடி மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது நண்பர் தனபாலுடன் வந்து முத்துப்பாண்டியை மது அருந்த அழைத்துள்ளார். அண்ணா காலனியில் மது அருந்தும் போது மணிகண்டன், முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இது சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தனபாலையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி