சிவகாசி: வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

80பார்த்தது
சிவகாசி: வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ. 11 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் திடீர் ஆய்வு செய்தார். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் காலனியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ. 30 லட்சம் செலவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதே போல் கவிதா நகரில் ரூ. 43 லட்சம் செலவில் குழந்தைகளுக்கான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சிவகாசி-சாத்தூர் ரோட்டில் ரூ. 10 கோடி செலவில் மாநகராட் சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதே போல் அண்ணா மலை-உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 56 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ. 11 கோடியே 29 லட்சம் செலவில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வளர்ச்சி பணிகளை விரைவாகவும், தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து விருதுநகர்-திருத்தங்கல் சாலையில் செயல்பட்டு வரும் நுண்உர செயலாக்க மையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி