சிவகாசி: ஒடையில் கிடந்த மூதாட்டி பிரேதம். போலீஸார் விசாரணை....

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம். சிவகாசி அருகே ஓடையில் கிடந்த மூதாட்டி பிரேதம். போலீஸார விசாரணை.
சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பாயி (70). இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மகன் முருகன் பராமரித்து வந்துள்ளார். கடந்த 3-ந்தேதி அதிகாலை 2. 15 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மூதாட்டி கருப்பாயியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜூன். 10 இன்று காலை செங்கமலப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு ஓடையில் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி