விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழன்னை கலையரங்கத்தை நேற்று ஜூன் 6 மாலை திறந்து வைத்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழன்னை கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நம்முடைய அரசுக்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு அந்தப் பாடப்பிரிவுகளை கொண்டுவருவதில், குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உரிய நிதிநிலைகளை அளிப்பதிலும் அரசு மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
நம் மாணவர்கள் நாட்டில் இருக்கின்ற உயர்தரமான கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதற்கும், அதைப்போலவே வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கும், சமூக நீதியின் வாயிலாக அத்தகைய வாய்ப்பை காலம்காலமாக மறுக்கப்பட்டவர்களுக்கு வழங்கி எல்லோருக்கும் எல்லாம் என்ற திட்டங்களை முதலமைச்சர் முன்னெடுத்திருப்பதாக தெரிவித்தார்.