சிவகாசி: சுவாமி வீதி உலா புறப்பாடு...

51பார்த்தது
திருத்தங்கல்லில், சப்பரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமிகள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், பிரசித்தி பெற்ற ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி கோவில் இருந்து ஸ்ரீகருநெல்லிநாதர் சுவாமி - ஸ்ரீமீனாட்சி அம்பாள், ஸ்ரீமுருகன் கோவிலில் இருந்து ஸ்ரீமுருகன் - ஸ்ரீவள்ளி - ஸ்ரீதெய்வானை சுவாமிகள் மயில் வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் வீதியுலா வந்தனர். நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :