சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் அரிவாளுடன் சுற்றி திரியும் இளைஞர்கள் கூட்டம். பதறும் சிசிடிவி வீடியோ காட்சிகள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் மற்றும் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேசன் எல்லை பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி வாலிபர்களிடையே மோதல் ஏற்படுவதும் கொலை முயற்சியில் ஈடுபடுவதும் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன் எல்லையில் செங்கமலநாச்சியாபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் ஒருவரை கடத்தி கொலை செய்யப்படும் போது அந்த வழியாக சென்ற எஸ்ஐ ஒருவர் கொலையை தடுத்து வாலிபரை காப்பாற்றினார். கடந்த 24 ஆம் தேதி திருத்தங்கல் தனியார் லாட்ஸ் பகுதியில் அரிவாள் வைத்து கொலை மிரட்டல் விடுத்த 4பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேசன் எல்லையில் நேற்று அதிகாலை இந்த மண்ணெண்யை குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. வாலிபர்களிடையே ஏற்படும் அடிக்கடியான இந்த மோதல் போக்கு பெற்றோர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 போலீஸ் ஸ்டேசன்களி்லும் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.