வெளியே இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்- சிவகாசியில் எம். பி மாணிக்கம் தாகூர் பேட்டி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், எஸ். பி. கண்ணன் ஆகியோர் காவலர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த எம். பி. மாணிக்கம் தாகூர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாகவோ சந்திரகுமாரின் வெற்றிக்காக பாடுபடுவோம், சீமானும் அண்ணாமலையும் மேட்ச் பிக்ஸ் செய்யும் கேம் விளையாடி வருகிறார்கள், வெளியே இருந்து கொண்டுபாஜகவிற்காக வேலை செய்யும் சீமான் வேகமாக நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும், பெரியாரின் எண்ணங்களையும் சமூகநீதி அரசியலையும் உடைத்தெறிய வேண்டும், சீமான் தமிழக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்பதும் நியாயமற்றது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது, வரவேற்கத்தக்கது என்றார்.